Wednesday, December 8, 2010

அக்காவின் நினைவுகள் -தங்கை உனக்காக எழுதியது

அக்காவின் நினைவுகள்

காலத்தின் நினைவுகளால்
கனத்துவிட்ட உறவுகளால்
கண்களிலே கருமணியாய்
காவியத்தின் நினைவுகளால்
உடன் பிறந்த சகோதரியே!
உயிராக நினைக்கின்றேன்- உன்
உணர்வுள்ள உறவுதனை
உயிர்த்துவிட்ட உயிரே !
உன்னை விட்டு -உன்
உயிர்தான் போனாலும்
காலமெல்லாம் நிலைத்திடுமே
கனிவான உன் பாசம்
கடந்த பல வருடங்கள் போல
உன் பிரிவினால் ஏங்கும்

அன்புச் சகோதரி
கீத்தா-

அக்காவின் நினைவுகள்-வலி இல்லை அனாலும் மனது நிறையுது

உன்னையும் உன் குணத்தையும்
நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் மலருது...
எத்தனை எத்தனை நினைவுகள்
எல்லாமே சுகமாக
இருக்குது..
அக்கா நீ .... என் சாப்பாட்டில்
ஒரு துண்டு கேட்பாய்... அனாலும்
நான் தரமாட்டன்...
அது ஏன் என்று தெரியாது...
நீ என்ன செய்வாய்.....
வலுக்கட்டாயமாய் சிறு துண்டு பாணை
பறிப்பாய் ............
நான் என்ன செய்வேன் ..........
அப்படியே பானை...போட்டுவிட்டு
நகர்ந்து விடுவேன்..
நீ அந்த துண்டு பாணை
தரும்வரையும் நான் சாப்பிட மாட்டேன்
அது உன் பாச விளையாட்டு
நான் பெரியவனாய் ஆனபிறகும்
உன் விளையாட்டு தொடர்ந்தது..
நினைத்து பார்க்க
சுகமாகவும் சுமையான வலியாகவும்
இருக்குது..

Thursday, December 2, 2010

அக்காவுக்கு பிடித்த அழகான பாடல்கள்

அக்காவுக்கு பிடித்த  அழகான பாடல்களின் இணைய தொடுப்புகள்
http://www.youtube.com/watch?v=ZCEVEOB7hao&feature=channel
http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ&feature=related
http://www.youtube.com/watch?v=oDRgGpEwSYw&feature=related
http://www.youtube.com/watch?v=6uSXRTgl3lY&feature=channel

என் அக்கா எனக்கு இன்னொரு அம்மா

என் அக்கா என் அம்மா

மண்ணில் பிறந்தவரெல்லாம் மாண்டுதான் போவார்-போனபின்
இருப்பவர் மனங்களில் வாழ்பவர்தான்  எத்தனை பேர் ?
என் அக்கா நீயேன் சீக்கிரமாய் சென்றுவிட்டாய்
எம்மை விட்டு தனியாக ...
மனசு கனக்கிறது திறந்து பார்க்கிறேன் தினமும்
பிறப்பில் தனி நீ எனக்கு அக்கா
வைத்த பாசத்தில் எனக்கு அடுத்த   அம்மா நீதானே !

எதிர்பார்ப்பின்றி  எவ்வளவோ  செய்தாய்- எங்களுக்கு
மட்டுமல்ல எத்தனையோ பேருக்கு ...என்றாவது
நான் கேட்டா நீ அதையெல்லாம் செய்தாய்
 நீயாக விரும்பிச்செய்வதே உன் அழகல்லவா!
இதுதான் இன்றைக்கும் எனக்கு நினைவிருக்கிறது .

அம்மா ஐயா இல்லாத குறைபோக்க  எமக்கு
அன்று நீ இருந்தாய் ...
நீ இலாத குறைபோக்க
இன்றெமக்கு யாரிருக்கா???
ஆண்டவரை அனுப்பிவை
உன் இடத்தை நிரப்பிவிட

எம்மிடம் நீ வரும்போதேல்லாம்
எவ்வளவோ கொண்டு வருவாய்
எனக்கு மட்டுமா இல்லையே
என் நண்பர்களுக்கும் சேர்த்தல்லவா
எப்படி அக்கா அது உன்னால்
மட்டும் முடிந்தது ..

உறவுக்கும் நட்ட்புக்கும்
விருந்து உன் வீட்டில் என்றால்
உன்னை வாட்டிய நோயெல்லாம்
எங்கேயோ பறந்து போகுமே

உன் சமையல் சுவைத்து யாரும்
உணவு நல்ல உருசி என்றால்
நீ மகிழும் சந்தோசம் யாரறிவார் ?
அது எவருக்குத்தான் புரியும்.

காலத்தின் கட்டாயமும்  அந்த
கடவுளின் சாபமா
உன்னையும் என்னையும்
கடைசி நட்ட்களில்
கதைக்க முடியாமல் தடுத்தது - இல்லை
உன்னை பிடீத்த நோயின்
வேதனை தடுத்தா ? இல்லை
நம்முறவை பிரித்து வைக்க
யாரேனும் காரணமோ?

மீண்டும் மீண்டும் ...
நினைத்து பார்க்கிறேன்
நீ என்னை சபித்ததுமில்லை
ஒருபோதும் வெறுத்ததும் இல்லை
நானும் நினைவறிந்து
ஒருபோதும் நடந்ததுமில்லை
நிமதியாய் இருக்கிறது
நினைத்தால் மனதுக்கு!

நினைத்து பார்க்கிறேன்
மறுபடியும் அடிக்கடி
நீ பட்ட நோயின் கொடுமை
போதுமென்று
நம்தாய்தான் அழைத்தாளோ-
இல்லை
ஐயாதான் அழைத்தாரோ !
இல்லை இல்லை
அம்மா நீ  வா என்று - உன்
முத்தமகள் (ராஜபிரியா) அழைத்தாளோ!

இம் மண்ணை விட்டு  நீ
விண் சென்றாலும்
என்றைக்கும் எமக்கு நீ
இன்னொரு தாய்தான்


இந்நிலம் விட்டு நீ
நித்திலம் சென்றாலும்
இவ்வுலகில் நீ நினைத்தபடியே
வாழ்ந்தாய் என்பதே எனக்கு நின்மதி
நீ வாழ்வது படைத்தவனிடம் 
சென்றுவிட்டாய்
என்பதும் திருப்தி ..
உன்பாசமும் ஆசியும் வேண்டி
கண்ணீரோடு விடைபெறுகிறேன்.

பிரிவினால் ஏங்கும்
தம்பி ராஜன்
(இரா.குணசீலன் )


அக்காவின் நினைவும் பகிர்வும்

ஊரில்  கோயில் திருவிழாக்கள் நடந்தால் ,இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள் குடும்பங்களாக நிகழ்ச்சி பார்க்க போவோம்,பலநாள் அக்காவும் அவரது...