Tuesday, August 16, 2011

சுமையாக சென்ற இரண்டு ஆண்டுகள்

இரண்டு ஆண்டுகள் பறந்தது -நீ
எங்களை விட்டு பிரிந்து
இருக்கிறது ஆசையாய் -
உன்னோடு  பேச...
உன்பேச்சைக் கேட்க!!
உன்னோடு சண்டை பிடிக்க ......
எட்டாத தூரம் எங்கோ சென்றுவிட்டாய் ..
மனதுக்குள்..சிறகடிக்கும்
உன் நினைவுகள் ....
சந்தோசம்ல்லாத கனமான நினைவுகள்
ஏன் தெரியுமா?
உன் பிரிவோ எங்களது வலியல்லவா
உனதன்பு முகம் தினமும்
எனக்கும் உலாவரும் .....
ஏன் தெர்யுமா ???
அக்காவாக பிறந்தாலும்
அம்மாவுக்கு அடுத்து வந்த
என் அம்மா அல்லவா?
என் ஆன்மா என்றைக்கும்
உன்னைநினைக்கும் ...
நீ இங்கில்லை யார் சொன்னது
உன் ஆசீர் எங்களுடனும்
உன் நினைவுகள் என்னுடனும்
என்றைக்கும் வாழும் ..
என் அக்கா உன் ஆன்மா
அமைதி பெற
என் பிரார்த்தனைகள்

பிரியமுடன்
தம்பி
இரா.குணசீலன் 




12 /08 /2011 அன்று எனது அக்காவின் இரண்டாம் ஆண்டு ... அவளது நினைவா
எழுதியது
  இன்று  வலைப்பூவில் பதிவிடப்பட்டது.



No comments:

Post a Comment

அக்காவின் நினைவும் பகிர்வும்

ஊரில்  கோயில் திருவிழாக்கள் நடந்தால் ,இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள் குடும்பங்களாக நிகழ்ச்சி பார்க்க போவோம்,பலநாள் அக்காவும் அவரது...